எரிசக்தி விநியோகம் தொடர்பாக கிரேக்க, துருக்கி நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவரும் நிலையில், 18 ரஃபேல் போர் விமானங்களை வாங்க, பிரான்ஸ் நாட்டுடன் துருக்கி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 18 போர் விமானங்களில் 10 பணம் கொடுத்து வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. மீதமுள்ள எட்டு விமானங்களை பிரெஞ்சு விமானப்படை கிரேக்க நாட்டு பரிசாக அளிக்க உள்ளது.
கிரேக்க, பிரெஞ்சு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இந்தாண்டு இறுதிக்குள் ஒப்பந்தம் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள எரிசக்தி நிலையத்தை கிரேக்க நாடு சொந்தம் கொண்டாடிவருகிறது. இதன் காரணமாக, இருநாடுகளுக்கிடையே போர் சூழும் அபாயம் உருவாகியுள்ளது. இந்நிலையில், போர் விமானங்களை அளித்து ராணுவத்தை மேம்படுத்த உதவிய பிரான்ஸ் நாட்டிற்கு கிரேக்க பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் நன்றி தெரிவித்துள்ளார்.