ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள தகவல் தொடர்புத் துறை அமைச்சகத்தின் முன்பு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி 11.40 மணிக்கு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்! - kabul
காபூல்: ஆப்கானிஸ்தானில் தகவல் தொடர்புத்துறை அமைச்சகத்தின் அருகே வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தகவல் தொடர்புத்துறை அமைச்சகம்
அதே சமயம், மற்றொரு கட்டடத்திலிருந்த பயங்கரவாதிகள் நான்கு பேர், ராணுவப்படையை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தத் தாக்குதல் தொடர்பாக பின்னணி தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
அமெரிக்கா, தலிபான் பிரதிநிதிகள் இடையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.