இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான 11 நாள் போர் இரண்டு நாள்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது. இஸ்ரேலில் உள்ள புனித தலமான ஜெருசலேமில் ரமலான் மாதத் தொழுகையின்போது இஸ்ரேல் காவல் துறைக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே ஏற்பட்ட பூசல் பெரும் மோதலாக வெடித்தது.
இரு நாட்டின் எல்லையான காசாவில் இஸ்ரேல் ராணுவமும் பாலஸ்தீனின் ஹமாஸ் இயக்கமும் மாறி மாறி நடத்திய வான்வெளித் தாக்குதலில் சிக்கி 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் பாலஸ்தீனைச் சேர்ந்தவர்கள்.
இந்த மோதலை நிறுத்த சர்வதேச நாடுகள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டுவந்தன. ஐநா சபை, அமெரிக்காவுக்கு தொடர் அழுத்தம் தந்துவந்த நிலையில், அண்டை நாடான எகிப்து இரு தரப்புக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக தூது சென்றது. இதையடுத்தும் இரு தரப்பும் போர் நிறுத்தத்தை அறிவித்தன.
இந்தப் போர் நிறுத்தத்தை நீண்டகாலம் நிலை நிறுத்தி பேச்சுவார்த்தையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த எகிப்திலிருந்து இரு அணிகளைக் கொண்ட தூதர்கள் இஸ்ரேல் சென்றுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தை குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எகிப்து அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:இஸ்ரேலுக்கு ரூ.5 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள் விற்க அமெரிக்கா முடிவு!