எகிப்து நாட்டில் கீஸா பிரமிடு என்ற இடத்தில் சுற்றுலாப்பயணிகள் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென வெடிகுண்டு வெடித்தது. இதில் 14 சுற்றுலாப் பயணிகள் படுகாயமடைந்ததாகவும், அவர்கள் தென் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் எகிப்து அரசு தகவல் தெரிவித்துள்ளது.
எகிப்து வெடிகுண்டு விபத்து; 14 பேர் படுகாயம்! - விபத்து
எகிப்து: கீஸா பிரமிடு என்ற இடத்தில் குண்டு வெடித்ததில் பேருந்தில் சென்ற தென்ஆப்பிரிக்க சுற்றுலாப் பயணிகள் 14 பேர் படுகாயமடைந்தனர்.
எகிப்து வெடிகுண்டு விபத்து: 14 பேர் படுகாயம்!
இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்து எகிப்து அரசு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த வெடிகுண்டு விபத்து கீஸா பிரமிடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.