தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

எகிப்தில் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்வு - எகிப்து குடியிருப்புக் கட்டிடம் இடிந்ததில் பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு

கடந்த மார்ச் 27ஆம் தேதியன்று, எகிப்தில் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

எகிப்து குடியிருப்புக் கட்டிடம் இடிந்ததில் பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு, Death toll rises to 23 as apartment building collapses in Egypt capital Cairo
Death toll rises to 23 as apartment building collapses in Egypt capital Cairo

By

Published : Mar 29, 2021, 9:31 PM IST

கெய்ரோ: எகிப்திய தலைநகர் கெய்ரோவில் ஒரு குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

கிழக்கு கெய்ரோவில் உள்ள ஜிஸ்ர் அல்-சூயஸ் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமையன்று (மார்ச் 27) 10 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 25 பேர் காயமடைந்தனர்.

சரிவுக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில எகிப்திய ஊடகங்கள், 'நில உரிமையாளர் சட்டவிரோதமாக ஐந்து மாடிகளைக் கட்டியதால் விபத்து ஏற்பட்டிருக்கிறது' என்று கூறுகின்றன.

எகிப்தில் குடியிருப்புக் கட்டடங்கள் இடிந்துவிழுவது தொடர் கதையாகிவருகிறது. பழங்காலக் கட்டடங்களை சரியாகப் பராமரிப்பதில்லை என்பதாலும் கட்டுமான விதிமுறைகளை மீறுவதாலும் இதுபோன்ற சம்பவம் ஏற்படுகிறது என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

இதையும் படிங்க:உலக பொருளாதாரத்தை மீண்டும் மிதக்கவைத்த 'எவர்கிவன்'!

ABOUT THE AUTHOR

...view details