தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இஸ்ரேல்வாசிகள் இந்தியாவுக்குச் செல்ல தடை! - இஸ்ரேல் செய்திகள்

ஜெருசலேம்: கரோனா பாதிப்பு அதிகமுள்ள இந்தியா உள்பட 7 நாடுகளுக்கு இஸ்ரேல் பயண தடைவிதித்துள்ளது.

COVID: Israel bans travel to India, six other countries
COVID: Israel bans travel to India, six other countries

By

Published : May 2, 2021, 2:39 PM IST

மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலில் தற்போதுதான் கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இதையடுத்து, நாட்டில் மீண்டும் தொற்றுப் பரவல் அதிகரிக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்துவருகிறது.

இது குறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம், அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "உக்ரைன், பிரேசில், எத்தியோப்பியா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, மெக்சிகோ, துருக்கி ஆகிய நாடுகளுக்கு இஸ்ரேலியர்கள் பயணம்செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இது மே 3ஆம் தேதிமுதல் மே 16ஆம் தேதிவரை நடைமுறையில் இருக்கும். இந்த அறிவிப்பானது இஸ்ரேலியரல்லாதவர்களுக்குப் பொருந்தாது.

இதற்கிடையில், இந்த ஏழு நாடுகளிலிருந்து திரும்பிவந்தவர்கள், இரண்டு வாரம் கண்டிப்பாகத் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

இதையும் படிங்க:கரோனாவால் 165 பத்திரிகையாளர்கள் மரணம்: ராகுல் கவலை

ABOUT THE AUTHOR

...view details