தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

தென் சீனக் கடலில் அமெரிக்காவின் விமானந்தாங்கி கப்பல்கள்- சீனா கண்டனம் - அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்த சீனா

தென் சீனக் கடற்பகுதியில் பயிற்சிக்காக அமெரிக்காவின் அணுசக்தியால் இயங்கும் இரு விமானந்தாங்கி கப்பல்கள் வருவதால் சீனா அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

தென் சீனக் கடலில் அமெரிக்காவின் விமானந்தாங்கி கப்பல்கள்
தென் சீனக் கடலில் அமெரிக்காவின் விமானந்தாங்கி கப்பல்கள்

By

Published : Jul 6, 2020, 11:59 PM IST

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடற்பகுதியில் ராணுவப் பயிற்சியில் பங்கேற அணுசக்தியால் இயங்கும் இரு விமானந்தாங்கி கப்பல்களை அமெரிக்கா அனுப்பி உள்ளது.

தென் சீனக் கடலில் 90 சதவீதம் தங்களுக்கென்று சீனா கூறுகிறது, இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 டிரில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெறுகிறது. மேலும் பல இடங்களில் செயற்கை தீவுகள், விமான நிலையங்கள் அமைத்துவருகிறது.

புரூனே, மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளும் தென் சீனக் கடலின் சில பகுதிகளுக்கு உரிமை கோருகின்றன. இந்த நிலையில் சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் ராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்காக அணுசக்தியால் இயங்கும் இரு விமானந்தாங்கிக் கப்பல்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது.

இந்தப் பகுதியில் சீனா தன் பலத்தைக் காட்டிவரும் நிலையில், இவ்விரு அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களும் பயிற்சிகளில் பங்கேற்று வருகின்றன. யுஎஸ்எஸ் ரொனால்ட் ரேகன், யுஎஸ்எஸ் நிமிட்ஸ் என்ற இரு விமானந் தாங்கிக்கப்பல்களும் தென் சீனக் கடலில் இருப்பதை அமெரிக்க கடற்படையும் உறுதி செய்துள்ளது.

தற்போது இதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் வேறு ஏதோ ஒரு நோக்கத்திற்காக தான் இந்த செயலை அமெரிக்க செய்கிறது எனவும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பள்ளி வளாகத்தில் விவசாயம்: குடிபெயர்ந்த தொழிலாளிகளின் குழந்தைகளுக்கு வழிகாட்டிய ஆசிரியர்!

ABOUT THE AUTHOR

...view details