தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

வளைகுடா நாடுகளில் இந்தியா சந்திக்கப் போகும் சவால்கள் - இந்தியாவும் வலைகுடா பிராந்தியமும்

ஹைதராபாத்: ஈரான் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள பதற்றம், இந்திய பொருளாதாரத்தையும், வளைகுடா நாடுகளுடனான பிராந்திய உறவுகளில் ஏற்படும் சிக்கல் குறித்தும் ஐ.நா சபைக்கான முன்னாள் இந்திய தூதர் அசோகி முகர்ஜி எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம் இதோ...

War
War

By

Published : Jan 12, 2020, 5:21 PM IST

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரமப் உத்தரவின் பேரில், அப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரானின் குட்ஸ் புரட்சிகர பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் காஸிம் சுலைமானி ஜனவரி 3ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பதிலடியாக, 2020 ஜனவரி 8ஆம் தேதியன்று, ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத்தளத்தின் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி நடத்திய தாக்குல், அப்பிராந்தியத்தில் ஏற்பட்ட முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. இது இந்தியாவுக்கு சவால்களையும், தீவிரமான கவனத்தையும் செலுத்த வழிவகுத்துள்ளது.

அமெரிக்கா - ஈரான் விவகாரத்தில் இந்தியா வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ பதிலில், "மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி, நிலையான தன்மை மற்றும் பாதுகாப்பு" ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. மத்திய கிழக்கு, வளைகுடா பிராந்தியத்தில், இந்தியாவுக்கு பல முக்கிய நலன்கள் உள்ளன. இந்த பிராந்தியத்தில் ஏற்படும் குழப்பம் இந்தியாவையும் பாதிக்கும் என்பதால், இந்த சிக்கலிலிருந்து பாதுகாக்கவும், அரசியல் மற்றும் பொருளாதார நலன்களை அளவிடுவதற்கும், ராஜதந்திர செயல்பாட்டில் இந்தியா இறங்கியாக வேண்டும்.

இந்த பிராந்தியத்தில் அரசியல் நிலையற்ற தன்மை நிலவினால், அது இந்தியாவின் வளத்திலும், முதலீடுகளிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும். தற்போது வளைகுடா பிராந்தியங்களில் பணிபுரிவோரில், 80 லட்சம் பேர் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள்; இவர்கள் ஆண்டுதோறும் சுமார் 40 பில்லியன் டாலர்களை, இந்தியாவின் பொருளாதாரத்தில் சேர்க்கின்றனர். இந்தியத் தொழிலாளர்கள் அங்கிருந்து திடீரென வெளியேறுவதைத் தடுப்பதே, இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு விடப்பட்டுள்ள உடனடி சவால்.

பெரிய எண்ணிக்கையிலான நபர்கள் தொடர்புடைய இச்சிக்கலை மிகக்கவனமாக கையாள வேண்டும் என்பதே உண்மை. எடுத்துக்காட்டாக, ஏப்ரல் 2015இல் ஏமன் நாட்டில் இருந்து இந்தியா குடிமக்கள் சுமார் 5000 பேரையும், 2011ல் லிபியாவில் இருந்து பல ஆயிரம் இந்தியப் பணியாளர்களையும் வெளியேற்றும் நெருக்கடியை அரசு எதிர்கொள்ள நேரிட்டது. பிராந்திய பொருளாதாரத்தில் தனது குடிமக்கள் தொடர்ந்து உற்பத்தி சார்ந்த பணிகளில் ஈடுபடுவதை உறுதி செய்ய, வளைகுடாவில் அரசியல் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட அந்நாடுகளுடன் தீவிரமாக செயல்படுவதே இந்தியாவின் முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும்.

இந்தியாவுக்குள்ள இரண்டாவது பெரிய சவால், வளைகுடா பிராந்தியத்தில்தான் இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதி ஆகும். இந்த பிராந்தியங்களில் இந்தியா கிட்டத்தட்ட 60 விழுக்காடு இறக்குமதியை கொண்டுள்ளது. 2018ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 112 பில்லியன் டாலர் மதிப்பிலான இறக்குமதியை கொண்டிருந்தது. இந்தியா இன்று உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளராக உள்ளது.

அமெரிக்க பொருளாதாரத்தடையின் தாக்கத்தால், இத்தகைய ஈரானின் எண்ணெய் இறக்குமதி வெகுவாகக் குறைந்தபோதும், இப்பகுதியின் தற்போதைய உறுதியற்றதன்மை இந்தியாவின் கச்சா எண்ணெய்க்கான இறக்குமதி செலவை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்க செய்துள்ளது. இது இந்தியாவின் உள்நாட்டு பொருளாதாரத்தில் பெட்ரோலியத்துடன் இணைந்துள்ள துறைகளை பாதிக்கிறது. கட்டுபடியாகும் விலையில் தேவையான அளவு எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்வது இந்தியாவின் எரிசக்தி தேவைக்கு விடப்பட்ட ஒரு சவாலாகும்.

வளைகுடா பிராந்தியத்தில் தகவல்தொடர்புக்கான இரண்டு முக்கிய கடல் பகுதியில் பாதைகளுக்கு வழிபெறுவது இந்தியாவின் முன் நிற்கும் மூன்றாவது சவாலாகும். இந்த பாதைகள் ஈரானுக்கும், அரேபிய தீபகற்பத்திற்கும் இடையிலான ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் பாரசீக வளைகுடா வழியாகவும்; ஏமனுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான பாப் அல்-மண்டாப் ஜலசந்தி மற்றும் செங்கடலை இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கும் முக்கிய சந்திப்புகள்.

மார்ச் 2015இல், கடல் பாதைகளின் பாதுகாப்பு முன்னுரிமை தரும் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை (சாகர்) இந்தியப் பெருங்கடல் கொள்கையை இந்தியா வெளியிட்டது. அதில், கடல் பாதைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து, கடல்சார் டொமைன் விழிப்புணர்வுக்காக, "பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கண்டறிந்து தடுக்க", நவம்பர் 2019இல், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கான தகவல் இணைவு மையம் (ஐ.எஃப்.சி-ஐ.ஓ.ஆர்) இந்தியாவின் குருகிராமில் நிறுவப்பட்டது.

இந்தியா தனது வணிகக் கப்பலைப் பாதுகாக்க, இரண்டு கடற்படைக் கப்பல்களை 2019 ஜூன் மாதம் பாரசீக வளைகுடாவில் நிறுத்தியது. வளைகுடா பகுதியில் ஸ்திரமின்மை வேகமாக அதிகரித்து வருவதால், கடல் பாதைகளை பாதுகாப்பது என்பது, பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளிடையே “பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் தகவல் பரிமாற்றம் மற்றும் புரிதல்” ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். தற்போதைய நெருக்கடியைக் கட்டுப்படுத்த ஐ.நா.பாதுகாப்பு சபையின் இயலாமையை மனதில் கொண்டு, அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் பரஸ்பர பாதுகாப்பு, பொருளாதார மற்றும் எரிசக்தி நலன்களைக் கொண்ட நாடுகளை, குறிப்பாக வளைகுடா பிராந்தியத்தில் ஒன்றிணைக்கும் ஒரு பிராந்திய முயற்சியை இந்தியா மேற்கொள்ள வேண்டும்.

இந்தியாவின் ராஜதந்திர உத்திகள், செயல்பாடுகளுக்கான பெரிய நோக்கம், பிராந்தியத்தில் நிலவும் ஸ்திரத்தன்மையானது தனது சர்வதேச வர்த்தகத்தை மோசமாக பாதிக்காது என்பதை உறுதிப்படுத்துவதாகும். வளைகுடாவில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாகும். 2018 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 60 பில்லியன் டாலர் மதிப்புள்ள இருவழி வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாப் அல்-மண்டாப் வழியாக கடல் பாதை, இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியான ஐரோப்பிய ஒன்றியம் உட்பட மேற்கு நாடுகளுடன் அதன் வர்த்தகத்தின் பெரும்பகுதியை கொண்டு செல்கிறது. இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான வர்த்தகம் 2018ஆம் ஆண்டில் 102 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. உலகளாவிய மின்னணு வர்த்தகத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் பங்கிற்கான உள்கட்டமைப்பை இந்த வர்த்தகம் வழங்குகிறது.

சர்வதேச வர்த்தகம் ஏற்கனவே இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40% பங்களிப்பு செய்கிறது; வரும் 2025 ஆம் ஆண்டில் ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை எட்டுவது இந்தியாவின் மிக முக்கியமான நோக்கமாகும். இருதரப்பு மற்றும் பிராந்திய ராஜதந்திரத்தின் மூலம் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றங்களை தணிப்பதற்கு குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது, இந்த நோக்கத்தை பூர்த்தி செய்ய இந்தியாவுக்கு பெரிதும் உதவும்.

இதையும் படிங்க: இந்தியா முன் நிற்கும் மூன்று சவால்கள்- எதிர்கொள்வது எப்படி ?

ABOUT THE AUTHOR

...view details