தாஷ்கண்ட்(உஸ்பெகிஸ்தான்):ஆப்கானிஸ்தான் நாட்டில் பெரும்பாலான நகரங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். அந்நாட்டில் உள்ள தங்களது தூதரங்களை காலி செய்யும் பணிகளை அமெரிக்க, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்டுவருகின்றன.
ஆப்கான் படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையில், தீவிரமான சண்டை நடைபெற்றுவரும் நிலையில், வடக்கு ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளனர்.
இந்தச்சூழ்நிலையில், அப்பகுதிகளில் தலிபான்களை எதிர்த்துச் சண்டையிட்ட ஆப்கான் படை வீரர்கள் 84 பேர் உதவி கேட்டு உஸ்பெகிஸ்தான் நாட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
இதுதொடர்பாக உஸ்பெகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,"ஆகஸ்ட 14ஆம் தேதி 84 ஆப்கான் படை வீரர்கள் அந்நாட்டு எல்லையை கடந்து உஸ்பெகிஸ்தானுக்குள் வந்தனர். அவர்கள், மூன்று காயம்பட்ட வீரர்களுக்கு மருத்துவ உதவி கோரினர்" எனக் கூறப்பட்டுள்ளது.
உஸ்பெகிஸ்தான் நாட்டுக்குள் நுழைந்த 84 வீரர்களுக்கு மருத்துவ உதவிகள், தற்காலிக தங்கும் இடம், உணவு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆப்கானில் 20 ஆண்டுகளாக நிலைபெற்றுவந்த நேட்டோ படைகளை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் முழுவதுமாக திரும்பப் பெறுவதாக அறிவித்து 90 விழுக்காட்டுக்கும் அதிகமான படைகளை அமெரிக்க திரும்பப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:20,000 ஆப்கானியர்களுக்கு அடைக்கலம் தரும் கனடா