தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள 'நமஸ்தே' கூறுங்கள் - இஸ்ரேல் பிரதமர் - நமஸ்தே கூறுங்கள்

கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள இந்திய முறையான 'நமஸ்தே' கூற கற்றுக்கொள்ளுமாறு இஸ்ரேல் மக்களுக்கு அந்நாட்டி பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவுரை வழங்கியுள்ளார்.

Israel pm
Israel pm

By

Published : Mar 5, 2020, 11:30 AM IST

சீனாவில் பரவி உலகையே மிரட்டிவரும் கோவிட்-19 (கொரோனா) வைரஸ், தற்போது இந்தியாவில் தலைத்தூக்கத் தொடங்கியுள்ளது. இந்நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செய்தியாளர்களைச் சந்திக்கையில், கொரோனா வைரஸிலிருந்து தற்காத்து கொள்ள சில வழிமுறைகளைப் பின்பற்றுமாறு தனது நாட்டு மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

நெதன்யாகுவின் அறிவுறுத்தல்கள்:

  • மக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கைகுலுக்குவதைத் தவிர்க்க வேண்டும்.
  • அதற்குப் பதிலாக இந்தியர்கள் கூறும் 'நமஸ்தே'வை பின்பற்றுங்கள். (அப்போது இருகரம் கூப்பி செய்துகாண்பித்தார்).

இஸ்ரேலில் இதுவரை 15 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா அச்சத்தின் காரணமாக ஏழாயிரத்திற்கும் அதிகமானோர் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details