ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக இருந்து வரும் அமெரிக்க ராணுவத்தை திரும்பப்பெற தலிபான் பயங்கரவாத அமைப்புக்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தையும் அமெரிக்கா தரப்பில் முன்னெடுக்கப்பட்டது.
துப்பாக்கிச் சூடு - 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!
காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் ஐந்து தலிபான்பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
- 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!
கதார் தலைநகர் தோஹாவில் அவ்வப்போது தலிபான் அமைப்பு பிரிதிநிதிகளும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இந்நிலையில், கந்தகார் மாகாணத்தில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் ஐந்து தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் மூன்று போலீஸார் உயிரிழந்துள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஜெனரல் டாடின் கான் தெரிவித்துள்ளார்.