தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு: காவலர்கள் உள்பட மூவர் உயிரிழப்பு! - குண்டு வெடிப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் காவல் துறையினர் உள்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 13 பேர் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு
ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு

By

Published : Jan 27, 2021, 5:24 PM IST

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், இன்று (ஜன.27) குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில், இரண்டு காவலர்கள் காயமுற்றனர்.

இந்த வகை வெடிப்பொருள்களை, ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்க செய்ய வாய்ப்புள்ளதாக காபூல் காவல் துறையின் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் குறித்து குற்றவியல் புலனாய்வு துறை குழு தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றது.

இதேபோல், தெற்கு உருஸ்கான் மாகாணத்தில், நேற்றிரவு (ஜன.26) நடந்த சம்பவத்தில் இரண்டு காவல் துறையினர் உள்பட மூவர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில், பொதுமக்களில் 10 பேருக்கும், ஒரு காவலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையும் படிங்க: ஆப்கானிஸ்தானை உலுக்கும் குண்டு வெடிப்பு: 2 போலீசார் மரணம்

ABOUT THE AUTHOR

...view details