ஆப்கானிஸ்தானில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்கா, தலிபான் இடையே அவ்வப்போது பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. எனினும், ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பின் அட்டுழியம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஃபார்யாப் மாகாணத்திலுள்ள குவேய்சர் பகுதியில் சோதனைச் சாவடியை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
ஆப்கானில்தானில் துப்பாக்கிச் சூடு: அப்பாவி மக்கள் 2 பேர் உட்பட 11 பேர் பலி! - afghanistan
காபூல்: ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படையினருக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், அப்பாவி பொதுமக்கள் இரண்டு பேர் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.
அப்பாவி மக்கள் 2 பேர் உட்பட 11 பேர் பலி
இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரும் உரிய பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பாதுகாப்பு படை வீரர்கள், ஐந்து தலிபான் பயங்கரவாதிகள், அப்பாவி பொதுமக்கள் இரண்டு பேர் என மொத்தம் 11 பேர் பலியாகினர்.