தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஏமன் நாட்டில் தொடர் தாக்குதல் - 12 பேர் பலி!

சனா: ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி - ஏமன் நேசப்படைக்கும் ஏற்பட்ட மோதலில் 12 பேர் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

By

Published : May 16, 2019, 9:28 AM IST

2015ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் ஆதரவு ஹவுதி எனும் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி - ஏமன் நேசப்படை தொடர் தாக்குதல் நடத்திவருகிறது. இதன் விளைவாக லட்சக்கணக்கானோர் அத்தியாவசிய தேவைகள் ஏதும் கிடைக்காமல் பெரும் இன்னல்களை சந்தித்துவருகின்றனர். இந்த போரில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். தலைநகர் சனா உள்பட வடக்கு ஏமன் பகுதியை ஹவுதி படையினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

இந்த சூழலில், தாலே மாகாணத்தில் முன்னேறியுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவுதி-ஏமன் நேசப்படை வான்வழித் தாக்குதல் நடத்தியதாகவும், இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஐந்து அரசுப்படை வீரர்களும், ஏழு ஹவுதி படையினரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details