ஆப்கானிஸ்தானில் தாலிபன் பயங்கரவாதிகளுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவிவருகிறது. இரு தரப்பிலும் உயிர்ச் சேதம் ஏற்பட்டுவருகிறது.
ஆப்கானில் 2 நாள்களில் வீரர்கள் உள்பட 119 பேர் உயிரிழப்பு
காபூல்: ஆப்கானிஸ்தானில் கடந்த 3, 4 ஆகிய தேதிகளில் நடந்தத் தொடர் தாக்குதலில், பாதுகாப்புப் படையினர் உள்பட 119 பேர் பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, கடந்த ஜூன் 3, 4 ஆகிய இரண்டு தேதிகளில் மட்டுமே அரங்கேறியத் தாக்குதல்களில், மொத்தமாக 119 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 102 பேர் பாதுகாப்புப் படை வீரர்கள் ஆவர். 17 பேர் பொதுமக்கள் ஆவர். சுமார் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஜூன் 3இல் 54 பேரும், ஜூன் 4இல் 65 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், ஜூன் 3ஆம் தேதி பாதுகாப்புப் படை நடத்தியத் தாக்குதலில் 183 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்றும், ஜூன் 4இல் ஆறு மாகாணங்களில் நடந்தத் தாக்குதலில் 181 பேர் பயங்கரவாதிகளும் உயிரிழந்ததாகப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.