இரான் நாட்டில் குர்திஸ்தான் மாகாணத்தில் உள்ள சாக்கஸ் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில், திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 11 நபர்கள் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் விரைவாகச் செயல்பட்டு தீயை அணைத்தனர். பின்னர் காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், கேஸ் சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
திருமண விழாவில் தீவிபத்து... 11 பேர் உயிரிழப்பு! - இரான் திருமண விழாவில் தீ விபத்து
குர்திஸ்தான்: திருமண விழாவில் ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் உயிரிழந்தனர், 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
திருமண விழாவில் தீ விபத்து
இதுகுறித்து காவல் ஆய்வாளர் கூறுகையில்," திருமணத்திற்கு வந்த 11 விருந்தாளிகள் உயிரிழந்தனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், மூன்று நபர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றார்.
இதையும் படிங்க: நித்யானாந்தாவை விசாரிக்க ப்ளு கார்னர் நோட்டீஸ்