ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே. இவர் அமெரிக்க அரசாங்கத்தின் ரகசியங்களை வெளியிட்டு பிரபலமடைந்தவர். இவரை நீண்ட காலமாக அமெரிக்க அரசாங்கம் கைது செய்ய முயற்சித்து வந்தது. பாலியல் வழக்கில் சிக்கி பிணையில் இருந்த இவருக்கு லண்டன்தான் அடைக்கலம் கொடுத்தது.
விக்கி லீக்ஸ் நிறுவனர் கைது - நிறுவனர்
லண்டன்: லண்டனில் அடைக்கலம் புகுந்துள்ள விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கைது செய்யப்பட்டுள்ளார்.
விக்கிலீக்ஸ் நிறுவனர் கைது
இந்நிலையில், பிணைக்கான காலஅளவு முடிவடைந்ததால் வெஸ்ட்மினிஷ்டர் நீதிமன்றம் அவரை கைது செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில், ஈக்வேடார் தூதரகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அசாஞ்சேவை காவல்துறையினர் கைது செய்தனர்.