தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

நூறு கோடி தடுப்பூசி சாதனைக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு

100 கோடி தடுப்பூசி டோஸ்கள் என்ற சாதனையை படைத்துள்ள இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

WHO chief
WHO chief

By

Published : Oct 21, 2021, 3:23 PM IST

இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி திட்ட இலக்கு 100 கோடியை தாண்டியுள்ளது. இந்த மைல் கல்லை எட்டியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்தியா மக்களுக்கு உலக சுகாதாரத்துறை அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதோனம் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் நரேந்திர மோடி, விஞ்ஞானிகள், சுகாதார அலுவலர்கள், இந்திய மக்கள் அனைவருக்கும் பாராட்டுகள். கோவிட்-19 தொற்றிலிருந்து பாமர மக்களையும் காப்பாற்றும் விதமாக அனைவருக்கும் தடுப்பூசி என்ற சாதனையை நீங்கு அடைந்துவிட்டீர்கள்" என்றார்.

உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குனர் பூனம் கேதர்பால் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு பில்லியன் கோவிட்-19 தடுப்பூசி என்ற பெரிய மைல் கல்லை இந்தியா எட்டியுள்ளது.

இந்த அசாத்திய சாதனை என்பது வலிமையான அரசியல் தலைமையால்தான் சாத்தியமானது. இந்தியாவின் இந்த முன்னேற்றம், உலகிற்கே பாதுகாப்பு கவசமாக அமையும்" எனப் பாராட்டியுள்ளார்.

இந்தியா 279 நாள்களில் 100 கோடி கோவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் என்ற சாதனையை படைத்துள்ளது. நாட்டின் 75 விழுக்காடு மக்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசியும், 31 விழுக்காடு பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:100 கோடி கரோனா தடுப்பூசி.. இந்தியா வரலாற்று சாதனை!!

ABOUT THE AUTHOR

...view details