பிரான்ஸ் நாட்டில் சமீபத்தில் புதிய மசோதா ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி பணியில் இருக்கும் காவலரின் அடையாளத்தை வெளிப்படுத்துவதை போன்ற செயலில் ஈடுபட்டால், அது தண்டைக்குரிய குற்றமாக கருதப்படும்.
மேலும், இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களை அதிகபட்சமாக ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும், 45,000 யூரோ அபராதமும் விதிக்க முடியும். கடந்த செவ்வாய்கிழமை இந்த மசோதாவுக்கு பிரான்ஸ் நாட்டின் தேசிய சட்டப்பேரவையில் (கீழ் சபை) ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த புதிய மசோதாவுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.