கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்திவருகிறது. பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதிலும், தொற்றின் தாக்கம் அதிகரித்துவருகிறது. இதனிடையே, கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு தவறாகக் கணித்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
மேலும், அதற்கு நிதி ஒதுக்குவது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் கூறுகையில், "எதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை உலக சுகாதார அமைப்பு முதலில் உணர வேண்டும். நோயின் தாக்கத்தை அது தவறாக கணித்துள்ளது.
எனவே, இனி அதற்கு நிதி ஒதுக்குவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். அனைவரையும் சமமாகப் பார்க்க வேண்டும். ஆனால், உலக சுகாதார அமைப்பு அப்படி பார்க்கவில்லை. சீனாவிற்கு ஆதரவாக அது செயல்பட்டுள்ளது" என்றார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய ஐநா தலைவர் அன்டோனியோ கட்டெரஸ், "கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் உலக சுகாதார அமைப்பின் நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, அதனை ஆதரிக்க வேண்டும் என்பது எனது கருத்து. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.