தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கரோனா தடுப்பூசிக்காக காத்திருக்கும் எலிசபெத் ராணி - காரணம் என்ன தெரியுமா? - பிரிட்டன் கொரோனா தடுப்பூசி

லண்டன்: பிரிட்டனில் முதியோர் காப்பகத்தில் வசிப்பவர்கள் , 80 வயதை தாண்டியவர்கள் ஆகியோருக்கு மட்டுமே முதல்கட்டமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என தகவல் வெளியான நிலையில், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு தற்போதைக்கு தடுப்பூசி வழங்கப்படாது எனக் கூறப்படுகிறது.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்

By

Published : Dec 6, 2020, 7:43 PM IST

அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம், ஜெர்மனியின் பயோஎன்டெக் (BioNTech) ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கரோனா தடுப்பு மருந்துக்கு உலகிலேயே முதன் நாடாக பிரிட்டனும் இரண்டாவது நாடாக பஹ்ரைனும் ஒப்புதல் வழங்கியிருந்தது. இதன் காரணமாக, அடுத்த வாரம் பிரிட்டன் முழுவதும் மருந்து விநியோகிக்கப்படவுள்ளது. அதில், முதியோர் காப்பகத்தில் வசிப்பவர்கள் , 80 வயதை தாண்டியவர்கள் ஆகியோருக்கு மட்டுமே முதல்கட்டமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு தனிச்சலுகை அளிக்கப்பட்டு கரோனா தடுப்பூசிக்கு வழங்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. தடுப்பூசியை மிக பெரிய அளவில் விநியோகிக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம், டிசம்பர் 8ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது. முதற்கட்டமாக, 50 மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 99 வயதாகியுள்ள எடின்பர்க் இளவரசருக்கும் 94 வயதாகியுள்ள ராணிக்கும் அடுத்த வாரத்திற்குள் தடுப்பூசி வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. தடுப்பூசி வழங்கும் திட்டத்தை மக்களிடையே விளம்பரப்படுத்துவதில் இளவரசர் சார்லஸ், வில்லியம் ஆகியோரின் பங்கு குறித்தும் ஆலோசிக்கப்பட்டுவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details