தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பிரிட்டன், அமெரிக்கா வரிசையில் உக்ரைன்: என்னவா இருக்கும்? - உக்ரைன் அதிபருக்கு கொரோனா

கீவ்: உக்ரைன் அதிபர் வெலோடிமிடர் ஜெலன்ஸ்கிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உக்ரைன் அதிபர்
உக்ரைன் அதிபர்

By

Published : Nov 10, 2020, 2:49 AM IST

கரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து குறைந்த வந்தாலும், சில நாடுகளின் அதன் இரண்டாவது அலை தொடங்கியுள்ளது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் வெலோடிமிடர் ஜெலன்ஸ்கிக்து கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தகுந்த இடைவெளி உள்ளிட்ட பாதுக்காப்பு வழிமுறைகள் பின்பற்றியபோதும் தனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனா அச்சுறுத்தல் இல்லாத அதிர்ஷ்டசாலிகளே உலகில் இல்லை. தகுந்த இடைவெளி உள்ளிட்ட பாதுக்காப்பு வழிமுறைகள் பின்பற்றியபோதும் எனக்கு கரோனா இருப்பது சோதனையில் தெரிவந்துள்ளது. வைட்டமின்களை தொடர்ந்து எடுத்துவருகிறேன். இப்போது, நன்றாக இருக்கிறேன். என்னை தனிமைப்படுத்திக் கொள்வேன் என உறுதி அளிக்கிறேன். இருப்பினும், பணியை தொடர்ந்து மேற்கொள்வேன்.

கரோனாவிலிருந்து பலர் குணமடைந்தது போல நானும் குணமடைவேன். அனைத்தும் நன்றாக நடக்கும் என நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார். உக்ரைன் நாட்டில் இதுவரை 4,69,018 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,09,143 பேர் குணமடைந்துள்ளனர். பெருந்தொற்று காரணமாக 8,565 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகிய உலக தலைவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details