பிரிட்டன் வரும் ஜனவரி 31ஆம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவுள்ளது. பல ஆண்டுகளாக இழுபறியில் இருந்த பிரெக்ஸிட் ஒரு வழியாக முடிவுக்கு வரவுள்ளதைக் கொண்டாடும் வகையில் பிரெக்ஸிட் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.
பிரிட்டன் அமைச்சர் சவீத் ஜாவித், இந்த நாணயத்தை வெளியிட்டார். 50 பென்ஸ் மதிப்புள்ள இந்த நாணயத்தில், 'அனைத்து நாடுகளுடன் அமைதி, செழிப்பு, நட்பு' (peace, prosperity and friendship with all nations) என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளது.
இந்த பிரெக்ஸிட் நாணயத்தை அமைச்சர் ஜாவித், பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு வழங்கவுள்ளார். வரும் ஜனவரி 31ஆம் தேதி 30 லட்சம் நாணயங்கள் புழக்கத்துக்கு வரவுள்ளன. இவ்வருடத்தில், மேலும் 70 லட்சம் நாணயங்கள் புழக்கத்துக்கு வரவுள்ளன.