தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

தடுப்பூசியை கண்டுபிடிக்க பிரிட்டன் புது முயற்சி

கரோனா பரிசோதனை தடுப்பூசி பரிசோதனையை தீவிரப்படுத்தும் விதமாக பிரிட்டனில் புதிய விதமான சோதனை முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

UK Vaccine
UK Vaccine

By

Published : Oct 20, 2020, 4:55 PM IST

உலகளவில் கரோனா தடுப்பூசி பரிசோதனை தொடர்பான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. குறிப்பாக பிரிட்டன் நாட்டில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்வதை உலக நாடுகள் கூர்ந்து கவனித்துவருகின்றன.

இந்நிலையில், பிரிட்டன் நாட்டில் தடுப்பூசி கண்டுபிடிப்பை வேகப்படுத்த புதுவிதமான பரிசோதனை ஒன்றை மேற்கொள்ள தயாராகிவருகிறது. அதன்படி, 18 முதல் 30 வயதுக்குள் உள்ள ஆரோக்கியமான நபர்களை தன்னார்வலர்களாகக் கொண்டு அவர்களிடம் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த நபர்களிடம் நோய் தொற்று கிருமியை மிகக் குறைந்த அளவில் பரவவிட்டு அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பரிசோதிக்க மருத்துவக் குழு முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி திறனை கண்டறிந்து அதற்கேற்ப தடுப்பூசியை விரைந்து கண்டறிய மருத்துவக் குழு முயற்சி மேற்கொள்ளவுள்ளது.

இந்த பரிசோதனையை லண்டன் இம்பீரியல் கல்லூரி மேற்கொள்ளவுள்ளது. இதற்காக அந்நாட்டு அரசு சுமார் 315 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:"பிடன் ஒரு கிரிமினல், நீங்களும் கிரிமினல்" - செய்தியாளர்களை வறுத்தெடுத்த ட்ரம்ப்

ABOUT THE AUTHOR

...view details