1996ஆம் ஆண்டு வரை பிரிட்டனின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த ஹாங்காங் 1997ஆம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு நாடு இரு விதிமுறைகள் என்ற அடைப்படையில் ஹாங்காங்கிற்கு தன்னாட்சிக்கான அதிகாரங்கள் ஆரம்பத்தில் வழங்கப்பட்டுவந்தன. பின்னர் ஹாங்காங்கை தனது முழுக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சியில் சீனா மெல்ல மெல்ல சட்டத்திருத்தங்களை மேற்கொண்டுவந்தது.
இதன் முக்கிய நகர்வாக அண்மையில் அங்கு தேசிய பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு பிடிகள் இறுக்கப்பட்டன. சீனாவின் இந்த செயலுக்கு மேற்கத்திய நாடுகள் கடும் எதிர்ப்பைக் காட்டிவரும் நிலையில், பிரிட்டன் தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பிரிட்டன் உள்துறையிடம் ஆலோசிக்கப்பட்டு ஹாங்காங் வாசிகளுக்கு பிரிட்டன் குடியுரிமை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிரிட்டன் குடியுரிமை பெறத் தகுதியுள்ள சுமார் 30 லட்சம் ஹாங்காங் வாசிகள் கல்வி, வேலைக்காக இப்போது பிரிட்டனுக்கு குடியேறலாம் எனவும், அவர்களுக்கு ஆறு மாதம் விசா இல்லாமல் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
பிரிட்டனில் ஆட்சியின் கீழ் முன்பு ஹாங்காங் இருந்துவந்த நிலையில், இந்த 30 லட்சம் பேருக்கும் குடியுரிமை வழங்க பிரிட்டன் தயாராகவுள்ளது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்களின் வரலாற்று கடனை நிறைவேற்றவுள்ளதாக பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சர் டோம்னிக் ராப் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:சீனாவின் இடத்தை இந்தியாவால் நிரப்ப முடியும்: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்!