தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஒமைக்ரான் காரணமாக பிரிட்டனில் முதல் மரணம் - ஒமைக்ரான் பரவல் குறித்து போரிஸ் ஜான்சன்

பிரிட்டன் நாட்டில் ஒமைக்கரான் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிரிட்டனில் முதல் மரணம்
பிரிட்டனில் முதல் மரணம்

By

Published : Dec 13, 2021, 6:48 PM IST

உருமாறிய கோவிட்-19 தொற்றான ஒமைக்கரான் பிரிட்டன் நாட்டில் தீவிரமடைந்துள்ளது. அந்நாட்டின் லண்டன் நகரின் தற்போது ஏற்பட்டுள்ள கோவிட்-19 பாதிப்பின் 50 விழுக்காடு ஒமைக்ரான் தொற்றால் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒமைக்ரான் பாதிப்பால் பிரிட்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் தற்போது உயிரிழந்துள்ளார். இதை அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் பரவல் குறித்து பேசிய போரிஸ், "பிரிட்டனில் ஒமைக்ரான் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், மக்கள் தடுப்பூசி பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. லண்டன் மட்டுமல்லாது நாட்டின் மற்ற பகுதிகளிலும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்துள்ளது.

இதுவரை ஐந்து லட்சம் பூஸ்டர் டோஸ்கள் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இனிவரும் நாள்களில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை உயரக்கூடும் என்பதால் தேவையா முன்னேற்பாடுகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது" என்றார்.

அந்நாட்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தினசரி கோவிட் பாதிப்பு ஏற்பட்டுவரும் நிலையில், இதுவரை ஒரு லட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பெருந்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க:தென்னாப்பிரிக்கா அதிபர் சிரிலுக்கு கோவிட்-19 பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details