கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி, ஐரோப்பியா ஒன்றியத்தைவிட்டு பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. இதனை (Britain + Exi = Brexit) பிரெக்ஸிட் என்று அழைக்கிறார்கள். இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் பிரெக்ஸிட்டுக்குப் பிறகான பேச்சுவார்த்தையைத் தொடரவுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தை நாளை நடைபெறவுள்ளது. இது குறித்து பிரிட்டன் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "ஐரோப்பியா ஒன்றியம் பிரிட்டன் ஆகியவற்றிற்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இதன்மூலம் பல்வேறு வகையில் பயனடைந்துள்ளதை வரவேற்கிறோம். இருப்பினும், மூன்று முக்கிய விவகாரங்களில் கருத்து வேறுபாடு நிலவிவருகிறது.