பிரிட்டனில் மரபியல் மாற்றமடைந்த உருமாறிய கரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்நிலையில், பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக அங்கு மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து போரிஸ் ஜான்சன் கூறுகையில், "கடந்தாண்டு பெருந்தொற்றுப் பரவ தொடங்கியதிலிருந்தே, கரோனாவுக்கு எதிரான போரில் நாடு தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது. பழைய வைரஸ் நோயைக் கட்டுப்படுத்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டுவருகிறோம். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஆனால், தற்போது, உருமாறிய கரோனா வைரஸ் நோய் வந்துள்ளது.