தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் தடை!

லண்டன்: விஜய் மல்லையாவை நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய லண்டன் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

U.K. High Court allows Vijay Mallya to appeal against his extradition

By

Published : Jul 2, 2019, 10:42 PM IST

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, ஒன்பதாயிரம் கோடி ரூபாய் பணமோசடி செய்த விட்டு, இங்கிலாந்துக்கு தப்பி ஒடினார். இதனையடுத்து இந்திய அரசு சார்பில் விஜய் மல்லையாவை நாடு கடத்தக்கோரும் மனு, லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், விஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய லண்டன் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details