லண்டன்: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு பிரிட்டன் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துள்ளது.
அசாஞ்சேவுக்கு ஜாமீன் வழங்குவதில் ஆபத்து உள்ளது எனவும், பிணை வழங்கினால், அமெரிக்காவில் ராஜதந்திர ரீதியிலான ஆவணங்களை வெளியிட்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணைக்கு அவர் ஆஜராகாமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
பாதுகாப்பான வேனில் அழைத்து வரப்பட்ட ஜூலியன் அசாஞ்சே மேலும், 2012ஆம் ஆண்டு, பிணையில் சென்ற அசாஞ்சே வழக்கு விசாரணைக்காக ஆஜராகாமல், ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்ததையும் அவர் குறிப்பிட்டார். ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்த அசாஞ்சே சுமார் 7ஆண்டுகளுக்குப் பின்பு 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்த முடியாது: லண்டன் நீதிமன்றம் திட்டவட்டம்