கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி, ஐரோப்பியா ஒன்றியத்தைவிட்டு பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. இதனை (Britain + Exi = Brexit) பிரெக்ஸிட் என்று அழைக்கிறார்கள். இந்நிலையில், எல்லை தாண்டி வர்த்தகம் மேற்கொள்ளும் வகையில் பிரெக்ஸிட்டுக்கு பிறகான ஒப்பந்தத்தை பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இறுதி செய்துள்ளது.
பிரிட்டன் வெளியேறுவதால் ஏற்படும் பொருளாதார இழப்பை ஈடுகட்டும் வகையில் ஒப்பந்தத்தை மேற்கொள்ள கடந்த பத்து மாதங்களாக பிரிட்டன், ஐரோப்பியா ஒன்றியத்தின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஒப்பந்தம் இறுதியாகியுள்ளதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.