தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இங்கிலாந்து செல்லும் ட்ரம்ப்! - uk

லண்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஜூன் மாதம் இங்கிலாந்திற்கு வருகை தர உள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

By

Published : Apr 24, 2019, 9:25 AM IST

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் 2016ஆம் ஆண்டு பதவியேற்ற பின் முதல் முறையாக கடந்த ஆண்டு இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, பிரதமர் தெரசா மே, ராணி இரண்டாம் எலிசபெத் ஆகியோரை சந்தித்து இரு நாடு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.பின்னர், அங்கிருந்து புறப்பட்ட அவர், ஸ்காட்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் ரஷ்யா அதிபர் புதினை சந்தித்தார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு ராணி இரண்டாம் எலிசபெத் தரப்பில் இங்கிலாந்திற்கு மீண்டும் வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை ட்ரம்ப் ஏற்று கொண்டுள்ளதாகவும், ஜூன் மாதம் வருகை தர உள்ளதாகவும் பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

கடந்த முறை ட்ரம்ப்பின் சுற்றுப் பயணத்தின்போது, அவர் கொண்டுவந்த, ”குடியேறிகளின் குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்து வைக்கும்” கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமானோர் இங்கிலாந்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பிரெக்ஸிட் விவகாரத்தில் பிரதமர் தெரசா மே சிக்கி தவிப்பதால், ட்ரம்ப்பின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முன்னதாக, பிரெக்ஸிட் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக நடைமுறைகளை பின்பற்றுவதாக ட்ரம்ப குற்றச்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details