போலந்து நாட்டில் பங்கி ஜம்ப் என்னும் விளையாட்டு மிகவும் பிரபலமானது. அவ்விளையாட்டை பலரும் ஆர்வத்தோடு விளையாடுவர். சுமார் 300 அடி உயரத்திற்கும் மேல் இருந்து தலை கீழாக தரையை நோக்கி குதிப்பர். இந்த விளையாட்டு கிரேன் உதவியுடன் நடைபெற்று வருகிறது.
330 அடி உயரம்: கயிறு அறுந்து கீழே விழுந்த இளைஞர்! - பங்கி ஜம்ப்
பங்கி ஜம்ப் விளையாட்டின் போது 330 அடி உயரத்தில் இருந்து கயிறு அறுந்ததில் இளைஞர் ஒருவர் பலத்த படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
330 அடி
சமீபத்தில் ஜிடினியா என்னும் இடத்தில் நடைபெற்ற பங்கி ஜம்ப் விளையாட்டில் இளைஞர் ஒருவர் மேல் இருந்து கீழே குதிக்கும் போது அவர் காலில் கட்டியிருந்த கயிறு அறுந்தது. இதில் தரையில் இருந்த காற்று நிரப்பியிருக்கும் பையில் விழுந்தார்.
330 அடி உயரத்தில் இருந்து தலை குப்பர கீழே விழுந்ததால் கழுத்தில் உள்ள எலும்பு உடைந்து பலத்த காயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.