ரஷ்யாவின் மாஸ்கோ பகுதியில் பறந்து கொண்டிருந்த 'எம்ஐ-8' ரக ஹெலிகாப்டர் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து, கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில், ஹெலிகாப்டரில் பயணித்த மூன்று நபர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்த காவல் துறை, மீட்புப் படையினர் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், " ஹெலிகாப்டர் தரவு ரெக்கார்டர், ஆன்-போர்டு குரல் ரெக்கார்டர் அடங்கிய இரண்டு கறுப்புப் பெட்டிகள் கண்டறியப்பட்டுள்ளன.