போலந்து நாட்டில் பர்தோஷிச என்ற இடத்திலுள்ள ஒரு பூனை, அங்குள்ள ஓக் மரத்தையே தனது வீடாகக்கொண்டு ஆறுவருடங்களாக வசித்துவருகிறது. இதுகுறித்து அருகில் வசித்து வருபவர்கள் கூறுகையில், ‘ஆறு வருடங்களுக்கு முன் நாய் அல்லது வேறு ஏதோ ஒரு விலங்கு அதை அச்சுறுத்தியுள்ளது. அதன் காரணமாக மேலே ஏறிய பூனை, ஆறு வருடங்களாக இறங்காமல் அடம்பிடித்து வருகிறது. ஆறு வருடங்களில் ஒரு முறை கூட அந்த பூனை கீழே இறங்கியதில்லை’ என்கின்றனர்.
மரத்தை விட்டு இறங்க மாட்டேன்... ஆறு வருடங்களாக அடம்பிடிக்கும் கில்லாடி பூனை! - Poland
வார்சா: போலந்து நாட்டில் பர்தோஷிச என்ற இடத்தில் ஆறு வருடங்களாக அங்குள்ள ஒக் மரத்திலிருந்து இறங்காமல் பூனை ஒன்று அடம்பிடித்து வருகிறது.
மரத்தை விட்டு இறங்க மாட்டேன் ஆறு வருடங்களாக அடம்பிடிக்கும் கில்லாடி பூனை
இடைப்பட்ட காலங்களில் தீயணைப்புத் துறையினர் சிலமுறை பூனையைக் கீழே இறக்க முயன்றுள்ளதாகவும், ஆனாலும் பூனை மீண்டும் மேலேயே ஏறிவிடுவதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்பூனைக்கு தனியே பேர் ஏதும் வைக்காமல் பர்தோஷிச பூனை என்றே அக்கம் பக்கத்தினர் பாசமாக அழைத்துவருகின்றனர்.