தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

வடக்கு மெஸிடோனா அதிபர் தேர்தல் - பெண்டரோவ்ஸ்கி வெற்றி! - North Macedonia

ஸ்கோப்ஜி: வடக்கு மெஸிடோனியா நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஸ்டிவோ பெண்டரோவ்ஸ்கி வெற்றி பெற்றுள்ளார்.

ஸ்டிவோ பென்டரொஸ்கி

By

Published : May 6, 2019, 3:12 PM IST

தென்கிழக்கு ஐரோப்பியாவில் வடக்கு மெஸிடோனியா அமைந்துள்ளது. அங்கு, கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று (ஞாயிற்றுகிழமை) நடைபெற்றது. இதில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஸ்டிவோ பெண்டரோவ்ஸ்கி (56), 51.66 விழுக்காடு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட வி.எம்.ஆர்.ஒ. கட்சியின் வேட்பாளர் கோர்டானா சில்ஜனோவ்ஸ்கா (Gordana Siljanovska) 44.73 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

இந்த வெற்றியின் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தில் வடக்கு மெஸிடோனா கால்பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நேட்டோ உறுப்பு நாடுகள் பட்டியலில் 30 நாடாக வடக்கு மெசிடோனா அடுத்தாண்டு இணைய உள்ளது.

இந்த வெற்றி தொடர்பாக பேசிய ஸ்டிவோ பெண்டரோவ்ஸ்கி, வடக்கு மெஸிடோனாவுக்கு இந்த வெற்றியின் மூலம் எதிர்காலம் பிறக்கப்போகிறது என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details