தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஜார்ஜ் ஃப்ளாய்ட் போராட்டம் - அடிமைகளை விற்றவரின் சிலை அகற்றம் - பிரிட்டன் தற்போதைய செய்தி

லண்டன்: ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டதையடுத்து உலகெங்கும் நிறவெறிக்கு எதிரான போராட்டம் வலுபெற்றுள்ள நிலையில், அடிமைகளை விற்று தொழில் செய்த ராபர்ட் மில்லிகன் என்பவரின் சிலை லண்டன் அருங்காட்சியக வளாகத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது.

Statue of slave trader
Statue of slave trader

By

Published : Jun 10, 2020, 3:49 PM IST

அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர் அந்நகரின் காவலரின் கோரப் பிடியில் சிக்கி உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, நிறவெறிக்கு எதிராக அமெரிக்க மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் வலுபெற்றுவருகிறது.

பிரிட்டன் தலைநகர் லண்டனிலும் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றவருகிறது. அதில் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அடிமைகளை விற்கும் தொழில் செய்த எட்வர்ட் கோல்ஸ்டனுக்கு வைக்கப்பட்டிருந்த சிலையை போராட்டகாரர்கள் தேசப்படுத்தினர்.

போராட்டகாரர்களின் இந்த செயலை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், "இது ஒரு குற்ற செயல்" என்று விமர்சித்துள்ளார். அதேபோல் பிரிட்டன் உள் துறை அமைச்சர் ப்ரிதி படேல், "இது முற்றிலும் ஒரு இழிவான செயல்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், எவ்வித போரட்டங்களுமின்றி 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அடிமை வியாபாரி ராபர்ட் மில்லிகனின் சிலை லண்டன் அருங்காட்சியக நுழைவாயில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.

"இப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு இந்த சிலை இங்கிப்பத்தில் விருப்பமில்லை, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பிளித்து ராபர்ட் மில்லிகனின் சிலை அகற்றப்பட்டுள்ளது" என்று அருங்காட்சிகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராபர்ட் மில்லிகன், பல்லாயிரகணக்கான மக்களை ஆப்பிரிக்காவிலிருந்து அழைத்துவந்து அடிமை வியாபாரம் செய்தார்.

இது குறித்து போராட்டத்தில் பங்கேற்ற ஒருவர் கூறுகையில், "ஒருவரது செயல்களை பாராட்டும் வகையிலேயே சிலைகள் நிறுவப்படும், ஆனால் இவர்களது செயல்களை பராட்டும் வகையில் இல்லை. மாறாக இழிவானதாக உள்ளது" என்றார்.

இதையும் படிங்க: போராட்டத்தில் காயமடைந்த 75 வயது முதியவரை குறிவைத்து ட்ரம்ப் ட்வீட்!

ABOUT THE AUTHOR

...view details