லண்டன்: இங்கிலாந்து நாட்டில் உள்ள பிளைமவுத் நகரில் நேற்று (ஆகஸ்ட்.12) மாலை அடையாளம் தெரியாத ஒருவர் பொது மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டார். இதில், ஓர் குழந்தை, இரண்டு பெண்கள் உள்பட 6 பேர் உயரிழந்தனர். ஐந்துக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, பிளைமவுத் நாடாளுமன்ற உறுப்பினர் லூக் பொல்லார்ட் தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று, எங்கள் நகரம், சமூகத்தின் மிகவும் மோசமான நாள். மக்கள் அனைவரும் பதற்றப்படாமல், காவல் துறையின் ஆலோசனைப்படி நடந்துகொள்ள வேண்டும்.