பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதவிலிருந்து விலகக்கோரி, அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தை தொடங்கியுள்ளன. இதில், இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசிற்கு எதிராக தொடர் விமர்சனங்கள் வைக்கப்பட்டும், பிரதமர் பதவிலியிருந்து இம்ரான் கானை விலகக்கோரியும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், லண்டனில் தங்கியுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் குஜ்ரான்வாலாவில் வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தின் (பி.டி.எம்) பேரணியில் வீடியோ இணைப்பு மூலம் உரையாற்றினார். அப்போது, இம்ரான் கான் அரசிற்கு எதிராக காரசாரமான கருத்துக்களை முன்வைத்து கடுமையாக விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது.