ரஷ்ய அரசியலில் திடீர் திருப்பமாக அந்நாட்டு அரசு கூண்டோடு ராஜினாமா செய்துள்ளது. பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் உட்பட அனைத்து அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதத்தை அதிபர் விளாதிமிர் புதினிடம் ஒப்படைத்தனர். இந்த திடீர் திருப்பம் அதிபர் புதினின் உத்தரவின் பேரில்தான் அரங்கேறியுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருபது ஆண்டுகளாக ரஷ்யாவை தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் விளாதிமிர் புதினின், அதிபர்பதவிக்காலம் முடிந்த பின்னரும் தனது அதிகாரத்தை கட்டுக்குள் வைத்திருக்க இந்த திடீர் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. புதினின் நெருக்கிய விசுவாசியான ரஷ்ய பிரதமர் மெத்வதேவ், 2008-12 காலகட்டத்தில் அதிபராகவும் பொறுப்பில் இருந்துள்ளார். 2012க்குப்பின் எட்டு ஆண்டுகளாக பிரதமராக இருந்த அவர், புதினுக்கு சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தவே இந்த ராஜினாமா முடிவை மேற்கொண்டுள்ளார். இவர் தற்போது அதிபரின் பாதுகாப்புக் குழு தலைவராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.