தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

விஷம் கொடுக்கப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் உடல் நிலையில் முன்னேற்றம் - ரஷ்யா எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி உடல்நிலை

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவல்னியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Navalny
Navalny

By

Published : Sep 15, 2020, 5:48 PM IST

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி விமானத்தில் பயணம் செய்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

சைபீரியாவிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் சென்றபோது அவர் மயக்கமடைந்த நிலையில், ரஷ்யாவில் அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உயர் சிகிச்சைக்காக அவர் ஜெர்மனி கொண்டுச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் நவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில், அவர் சிகிச்சை பெற தொடங்கி ஒரு மாதம் ஆகவுள்ள நிலையில் நவல்னியின் உடல் நிலை தற்போது நல்ல முன்னேற்றத்தை காண தொடங்கியுள்ளது. அவர் தற்போது வென்டிலேட்டரிலிருந்து வெளியேறி, நடக்கும் அளவிற்கு தேறியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதே வேளையில் விஷத்தின் தாக்கத்திலிருந்து அவர் மீட்சி பெற சில காலம் பிடிக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் தீவிர எதிர்ப்பாளரான நவல்னி, அந்நாட்டின் ஊழல் புகார் தொடர்பாக தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஐ.நா பெண்கள் நிலை ஆணையத்தின் உறுப்பினரான இந்தியா!

ABOUT THE AUTHOR

...view details