கரோனா தடுப்பூசி சோதனையில் உலக நாடுகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ள நிலையில், இதன் முதல் வெற்றியை நோக்கி ரஷ்யா பயணித்துவருகிறது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவைச் சேர்ந்த கமேலியா நிறுவனம் கரோனா தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட்டுவரும் நிலையில், இந்நிறுவனம் தடுப்பூசிக்கான ஒப்புதலை ஆகஸ்ட் 10க்குள் பெறும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த திட்டத்தின் இயக்குநரான அலெக்சாண்டர் கின்ஸ்பர்க் இந்த தடுப்பூசியை தனக்கு செலுத்தி பரிசோதித்துக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்ய ராணுவத்தினர் பலர் சோதனை முயற்சிக்கு உட்படுத்திக் கொண்டதாகவும் கூறியுள்ளார். இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைத்தப்பின்னர், முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு செலுத்தப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.