தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'எலி' பட வடிவேல் பாணியில் இங்கிலாந்தில் கொள்ளை முயற்சி - ஆலனின் ஐடியா

வடிவேலு ஸ்டைலில், மிரட்டல் கடிதம் கொடுத்து கொள்ளை அடிக்க முயன்றவரின் கையெழுத்து புரியாததால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது பெரும் பேசுபொருளாகியுள்ளது.

வடிவேல் பாணியில் கொள்ளை முயற்சி
வடிவேல் பாணியில் கொள்ளை முயற்சி

By

Published : Aug 14, 2021, 7:42 PM IST

நடிகர் வடிவேலு 'எலி' என்ற படத்தில் வங்கிக்கொள்ளை காட்சியில் நடித்திருப்பார். வங்கிக்குள் செல்லும் அவர், கணக்காளரிடம் மிரட்டல் கடிதம் எழுதிக்கொடுத்து பணம் கேட்பார்.

ஆனால், தப்புத் தப்பாய் எழுதி இருப்பதாகக் கூறும் கணக்காளர், சரியாக எழுதி வா என்று கூறுவார். இதே போன்ற சம்பவம் இங்கிலாந்தில் நடந்திருக்கிறது.

வடிவேல் பாணியில் கொள்ளை முயற்சி

இங்கிலாந்து சூசக்ஸ் பகுதியைச் சேர்ந்த ஆலன் ஸ்லாட்டரி (67) என்பவர், கடந்த மார்ச் 18 ஆம் தேதி, ஹாஸ்டிங்ஸ் பகுதியிலுள்ள வங்கி ஒன்றுக்குள் நுழைந்தார். நேராக கணக்காளரிடம் சென்றவர், ஒரு கடிதத்தைக் கொடுத்துவிட்டு, தெனாவட்டாக அவரை பார்த்தார்.

கடிதத்தை வாசிக்க முயன்ற கணக்காளருக்கு ஒன்றும் புரியவில்லை. ‘என்னய்யா எழுதியிருக்கே. ஒண்ணும் புரியல. ஒழுங்கா எழுதிட்டுவா’ என்று கூறியிருக்கிறார். அக்கம் பக்கம் ஆட்கள் இருந்ததால், கொள்ளையடிக்க வந்த ஆலன் சத்தம் போடாமல் போய்விட்டார்.

எழுத தெரியாத ஆலன்

அவர் போனபிறகு, அதில் என்ன எழுதியிருந்தது என்பதை யூகித்து பார்த்த கணக்காளர் அதிர்ச்சியானார். அதாவது, ‘நீங்கள் வைத்திருக்கிற கேமரா என்னை காட்டிக்கொடுக்காது.

பத்து, இருபது பவுண்ட் ரூபாய் நோட்டுகளை தர வேண்டும். இல்லை என்றால் பிற வாடிக்கையாளர்கள் குறித்து நினையுங்கள்’ என்பதுதான் அந்த மிரட்டல் கடிதம். இதுகுறித்து உடனடியாக வங்கி நிர்வாகம் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தது. காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதேபோல, மார்ச் 26 ஆம் தேதி, செயின்ட் லியோனார்ட்ஸில் உள்ள வங்கி ஒன்றுக்கு சென்ற ஆலன், காசாளரிடம் சென்று மிரட்டல் கடிதத்தை நீட்டிவிட்டு, அதே போல லுக் விட்டுள்ளார். அங்கிருந்த பெண் காசாளர், அவர் எழுத்தைப் புரிந்துகொண்டு, கொஞ்சம் பயந்து நடுங்கி 2,400 பவுண்டை கொடுத்துள்ளார். அதன் இந்திய மதிப்பு சுமார் 2 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் ஆகும்.

சிக்கிய ஆலன்

தனது மிரட்டல் பாணி சக்சஸ் ஆன குதூகலத்தில், ஏப்ரல் 1ஆம் தேதி ஹாவ்லாக் சாலையில் உள்ள நாட்வெஸ்ட் வங்கிக்கு சென்று அதே போல மிரட்டல் கடிதத்தை நீட்டினார்.

ஆனால், அங்கிருந்த கணக்காளர் அதெல்லாம் தரமுடியாதுப்பா, நீ என்ன வேணாலும் பண்ணிக்க என்று ஆலனிடம் சொல்லி காவல் துறையினரிடம் சிக்க வைத்துள்ளார். இந்த மூன்று குற்றங்களுக்காகவும் இப்போது ஆலனுக்கு, ஆறு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details