ரோம் (இத்தாலி):இத்தாலி நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த 30 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கடந்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்துள்ளது. இதனால் அந்நாட்டின் மத்திய பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக அந்நாட்டின் நோநான்டோலா, ஃபாஸல்டா, கேம்போ கலியானோ, எமிலியா ரோமாக்னா ஆகிய பகுதிகளில், 160 தீயணைப்பு வீரர்கள் இரவு பகல் பாராது மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.