இரண்டாம் உலகப்போரில் பங்குபெற்ற கேப்டன் டாம் மோரே தனது 100ஆவது பிறந்த தினத்தை கொண்டாடினார். அப்போது கரோனா வைரஸுக்கு எதிராக முன்னணியில் போராடி வரும் சுகாதார ஊழியர்களுக்காக 33 மில்லியன் யூரோக்கள் திரட்டினார்.
இவரது செயல்களைப் பாராட்டும் வகையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கேப்டன் டாம் மோரேவுக்கு சிறப்பான மரியாதை வழங்க ராணி எலிசபெத்திடன் பரிந்துரைத்தார். இதுகுறித்து அவர் பதிவிட்ட ட்வீட்டில், ''டாம் மோரேவின் நிவாரண நிதி திரட்டும் செயல் பல சாதனைகளை படைத்துள்ளது. நாட்டின் பல்வேறு தரப்பினரையும் ஊக்கப்படுத்தியுள்ளது. கரோனா வைரஸை எதிர்கொள்ள இருட்டில் தவித்த அனைவருக்கும் ஒளியை போன்று வழிகாட்டியுள்ளார்'' என்றார்.