தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

தேர்தலை தள்ளிவைத்து ஆட்சியை தக்கவைத்து கொள்ளும் புடின்!

அத்தியாவசியப் பணியாளர்கள் தவிர, வேறுயாரும் பணிக்குச் செல்லவேண்டாம் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்

By

Published : Mar 26, 2020, 8:14 AM IST

Updated : Mar 26, 2020, 9:45 AM IST

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறுகையில், அத்தியாவசிய வேலைகளை கருத்திற்கொண்டு சிலர் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தேவையற்றவர்கள் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார். முன்னதாக, குடியரசுத் தலைவர் தேர்தல் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.

இதற்கு வேறெந்த தேதியையும் புடின் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மருந்தகங்கள், வங்கிகள் தொடர்ந்து இயங்கும் என்று கூறியுள்ள புடின், நாட்டு மக்களின் உடல்நலமும், வாழ்வும், பாதுகாப்பும் தான் மிக முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் காவலரைத் தாக்கிய இளைஞர்கள்... 144 தடையை மீறியதில் தகராறு!

ரஷ்யாவில் புதிதாக 163 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதன்மூலம் அந்நாட்டில் மொத்தமாக 658 பேருக்குக் கரோனா தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Mar 26, 2020, 9:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details