இங்கிலாந்து முன்னாள் பிரதமர் தெரசா மே ராஜினாமா கடிதம் கொடுத்ததை அடுத்து கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் அந்நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.
இந்திய வம்சாவளி பெண் உள்துறை அமைச்சராக பதவியேற்பு!
இங்கிலாந்தில் புதிய பிரதமர் பதவி ஏற்றதையடுத்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரீத்தி படேல் உள்துறை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
Priti Patel
இந்நிலையில் போரிஸ் ஜான்சனின் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரீத்தி படேல் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதற்கு முன் அவர் சர்வதேச வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்து ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு எம்பிக்களின் ஆதரவை பெற முடியவில்லை என்று தெரசா மே ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.