தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

மரியம் திரேசியாவிற்கு புனிதர் பட்டம் - போப் ஆண்டவர் அறிவிப்பு - கேரளா கன்னியாஸ்திரி மரியம் திரேசியா

வாடிகன்: போப் ஆண்டவர் பிஃரான்சிஸ் இந்திய கன்னியாஸ்திரி மரியம் திரேசியா உட்பட ஐந்து பேரை புனிதர்களாக அறிவித்துள்ளார்.

மரியம் திரேசியா

By

Published : Oct 13, 2019, 11:17 PM IST

Updated : Oct 13, 2019, 11:49 PM IST

இது தொடர்பாக ரோம் நாட்டின் உள்ள வாடிகன் சிட்டியில் நடைபெற்ற விழாவில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் இன்று இந்தியாவைச் சேர்ந்த காலமான கன்னியாஸ்திரி மரியம் திரேசியா, இங்கிலாந்தைச் சேர்ந்த கார்டினர் ஜான் ஹென்றி நியூமேன், ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த மார்க்ரெட் பேஸ், இத்தாலியைச் சேர்ந்த ஜியுசிபினா வன்னினி, பிரேசிலைச் சேர்ந்த டுல்சி லோப்ஸ் ஆகிய கன்னியாஸ்திரிகளை புனிதர்களாக அறிவித்தார்.

மேலும் கத்தோலிக்க முறைப்படி கன்னியாஸ்திரிகள் அதிசியம் ஏதேனும் புரிந்திருக்க வேண்டும், அதன்படி மரியம் திரேசியா இரண்டு அதிசயங்களை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது.

இந்நிகழ்வில் மத்திய இணை வெளியுறவுத் துறை அமைச்சர் முரளிதரன் உள்ளிட்ட இந்திய பிரநிதிகள் கலந்து கொண்டனர். மேலும் திருச்சூரில் இருந்து 500 பேர் இந்த விழாவில் பங்குப்பெற்றனர்.

மரியம் திரேசியா குறிப்பு!

கேரள மாநிலம் திருச்சூரில் 1876ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி மரியம் திரேசியா பிறந்தார். இவர் தன் 16வயது முதலே சமூக பணியில் ஈடுபட்டார். பின் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு மக்களுக்கு ஊழியம் செய்ய கன்னியாஸ்திரியாக மாறினார். இதைத் தொடர்ந்து 1914ஆம் ஆண்டு புனித குடும்பத்தின் சகோதிரிகளின் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார். 1926ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதியன்று அவர் காலமானார்.

தற்போதைய செய்திகள் :'விமான பயணிகளுக்கு உறுதியளித்த ஏர் இந்தியா நிறுவனம்'

Last Updated : Oct 13, 2019, 11:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details