சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு எனப்படும் எஃப்ஏடிஎஃப் (FATF) அமைப்பின் வருடாந்திர கூட்டம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எஃப்ஏடிஎஃப் அமைப்பு நிர்வாகிகள் காலக்கெடு கொடுத்து எச்சரித்தனர்.
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுவதை தடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால் கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்படும் என FATF எனப்படும் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு எச்சரித்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானை பிப்ரவரி மாதம் வரை க்ரே பட்டியலில் வைத்திருக்கவும் எஃப்ஏடிஎஃப் முடிவு செய்துள்ளது.