தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஆண் குழந்தை பிறக்காத அதிசய கிராமம்! - கடந்த 10 ஆண்டு

போலந்து நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆண் குழந்தையே பிறக்கவில்லை என்று வெளியான தகவல் பலரையும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.

poland

By

Published : Aug 23, 2019, 10:27 PM IST

போலந்து நாட்டில் உள்ள மீஜிஸ் ஓட்ரன்ஸ்கி என்ற கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு ஆண் குழந்தைகூட பிறக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச குழந்தைகள் நிகழ்ச்சி ஒன்றில் பல்வேறு நாட்டில் இருந்து குழந்தைகள் பங்கேற்றனர். ஆண், பெண் குழந்தைகள் என பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் போலந்து நாட்டில் இருந்து பெண் குழந்தைகள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

இது குறித்து பலர் விசாரணை நடத்தியபின்பு, 10 ஆண்டுகளாக ஒரு கிராமத்தில் ஆண் குழந்தையே பிறக்கவில்லை என்றும், அங்கு வசிக்கும் பெண்கள் அவர்கள் உணவு பழக்கத்தையே மாற்றினர் ஆனால் எந்த பலனும் இல்லை என்றும் தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக ஆய்வு நடத்தியும் இதுவரை காரணம் கிடைக்கவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து அந்த கிராமத்தில் ஆண் குழந்தை பெற்றெடுக்கும் பெண்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவிப்பை வெளியிட்டது.

இருப்பினும் அங்கு பெண் குழந்தைகளே பிறந்ததால் அந்த பரிசுத் தொகையை இதுவரை எந்த பெண்ணும் வாங்கவில்லை. இச்சம்பவம் உலக மக்களிடையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details